/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ கட்டி 9 மாதங்களே ஆன பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது கட்டி 9 மாதங்களே ஆன பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
கட்டி 9 மாதங்களே ஆன பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
கட்டி 9 மாதங்களே ஆன பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
கட்டி 9 மாதங்களே ஆன பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
ADDED : செப் 23, 2025 06:27 AM

திருச்சி; துறையூர் அருகே அரசு பள்ளியில், ஒன்பது மாதத்துக்கு முன் கட்டப்பட்ட அறையின் கூரை கான்கிரீட் நேற்று முன்தினம் பெயர்ந்து விழுந்தது. விடுமுறை நாள் என்பதால், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சிங்களாந்தபுரத்தில் யூனியன் துவக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 34 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு, இரண்டு வகுப்பறைகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டு, ஒன்பது மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.
சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று காலை, வகுப்பறைகளை பள்ளி தலைமை ஆசிரியர் திறந்தார்.
அப்போது, ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை நடக்கும் அறையின் கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்து, மாணவர்கள் உட்காரும் சேர்கள், எல்.இ.டி., டிவி, கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவை சேதமடைந்திருந்தன. கல்வித்துறை அதிகாரி, யூனியன் அலுவலக அதிகாரிகளுக்கு தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்தார்.
மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு வந்து கான்கிரீட் பெயர்ந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். துறையூர் வட்டார கல்வித்துறை அலுவலர்கள், யூனியன் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இந்த வகுப்பறை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, ஜனவரியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
பள்ளி விடுமுறை நாளில், இந்த சம்பவம் நடந்ததால், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் தப்பினர்.