/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ பல்கலை மாணவர் தற்கொலையில் 5 பேர் கைது பல்கலை மாணவர் தற்கொலையில் 5 பேர் கைது
பல்கலை மாணவர் தற்கொலையில் 5 பேர் கைது
பல்கலை மாணவர் தற்கொலையில் 5 பேர் கைது
பல்கலை மாணவர் தற்கொலையில் 5 பேர் கைது
ADDED : செப் 22, 2025 04:03 AM
திருச்சி: திருச்சி மாவட்டம், மண்டையூர் அருகே ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்படி, திருச்சி ரயில்வே போலீசார் உடலை மீட்டு, விசாரித்தனர்.
இதில், இறந்தது, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த கர்ணன் மகன் மாரீஸ்வரன் என தெரிந்தது. இவர், விடுதியில் தங்கி, திருச்சி அண்ணா பல்கலையில், பி.இ., மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இவரிடம் முகநுால் மூலம் நண்பர்களாக பழகி, சர்ச்சையாக வீடியோ எடுத்து மிரட்டி, பணம் பறித்ததால் நேற்று முன்தினம் இரவு, ராமநாதபுரத்தில் இருந்து திருச்சி வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதில், இளங்கோவன், 20, முத்துராஜா, 21, ஆன்டனி சஞ்சய், 21, பாண்டீஸ்வரன், 21, பவித்ரன், 21, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.