/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டம்: மாணவர் சங்கத்தினர் கைது நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டம்: மாணவர் சங்கத்தினர் கைது
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டம்: மாணவர் சங்கத்தினர் கைது
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டம்: மாணவர் சங்கத்தினர் கைது
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டம்: மாணவர் சங்கத்தினர் கைது
ADDED : ஜூன் 11, 2024 07:41 PM
திருச்சி:திருச்சியில் முற்றுகை போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினரை, போலீசார் கைது செய்தனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், திருச்சி, தலைமை அஞ்சல் அலுவலகத்தை, நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டபடி, போலீசார் அமைத்த தடுப்புகளை கடந்து, அஞ்சல் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அதில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தடையை மீறி அஞ்சல் அலுவலகத்துக்குள் செல்ல முன்றவர்களையும், சாலை மறியலிலும் ஈடுபட்டவர்களில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.