/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ திருச்சி விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்த புதிய முனையம் திருச்சி விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்த புதிய முனையம்
திருச்சி விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்த புதிய முனையம்
திருச்சி விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்த புதிய முனையம்
திருச்சி விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்த புதிய முனையம்
UPDATED : ஜூன் 12, 2024 06:05 AM
ADDED : ஜூன் 11, 2024 08:06 PM

திருச்சி:திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம், நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
நேற்று காலை, சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கு, முதலாவதாக வந்த, 'இண்டிகோ' விமானத்திற்கு, 'வாட்டர் சல்யூட்' அளித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. புதிய முனையத்துக்கு வந்த பயணிருக்கு, விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை கமிஷனர் ஹரிசிங் நயால் மற்றும் அதிகாரிகள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், 75 ஆயிரம் ச.மீ., பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தில், ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள் தரையிறங்கும் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் 10 விமானங்களின் பயணியரை இங்கு கையாளலாம்.
புதிய முனையத்தில், 1,000 கார்கள், 10 பஸ்களை நிறுத்தும் வசதி உள்ளது. புறப்பாடுக்காக 10 வாயில்கள், வருகைக்காக 6 வாயில்கள், 60 செக் - -இன் கவுன்டர்கள், இமிக்கிரேஷன் பிரிவுக்காக 40 கவுண்டர்கள், 15 எக்ஸ்ரே மிஷின்கள், 3 வி.ஐ.பி., லவுஞ்சுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரன் வேயின் எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கண்காணிப்பு கோபுரத்துடன் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய முனையம் செயல்பட துவங்கிய பின், ஏற்கனவே உள்ள முனையத்தில், விமான போக்குவரத்து மற்றும் பயணியரை கையாளுவதற்கான பணிகள் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.