/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ திருச்சி காவிரி ஆற்றில் ரூ.106 கோடியில் புதிய பாலம் திருச்சி காவிரி ஆற்றில் ரூ.106 கோடியில் புதிய பாலம்
திருச்சி காவிரி ஆற்றில் ரூ.106 கோடியில் புதிய பாலம்
திருச்சி காவிரி ஆற்றில் ரூ.106 கோடியில் புதிய பாலம்
திருச்சி காவிரி ஆற்றில் ரூ.106 கோடியில் புதிய பாலம்
ADDED : ஜூலை 13, 2024 01:21 AM

திருச்சி:திருச்சி, சிந்தாமணி பகுதியில் இருந்து, திருச்சி நகரை, ஸ்ரீரங்கத்துடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இரும்பு பாலம் பழுதடைந்ததால், 1976ம் ஆண்டு, காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது.
அந்த பாலம் தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது. இடையில் பாலம் பழுதடைந்து, சீரமைக்கப்பட்டது.
தற்போது வாகனங்கள் பெருக்கத்தால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அதே இடத்தில் மேலும் ஒரு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. புதிய பாலம் மேலசிந்தாமணியில் இருந்து, மாம்பலச்சாலை வரை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
எஸ்.டி., இன்பிரா நிறுவனத்திடம் புதிய பாலம் கட்டும் பணி ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
மொத்தம், 106 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டுமான பணிக்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா, பூமிபூஜையுடன் நடந்தது. அமைச்சர்கள் நேரு, மகேஷ் பங்கேற்றனர். புதிய பாலப்பணிகளை, 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பாலத்தின் விபரம்
நீளம் - 545 மீ.,
அகலம் - 17.75 மீ., (நான்கு வழி)
செலவு - ரூ.106 கோடி
கட்டுமானம் - ரூ.68 கோடி
நிலம் எடுப்பு - ரூ.30 கோடி
இதர வசதி - ரூ.8 கோடி