/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ சுற்றுலா வளர்ச்சி கழகம் மீது எஸ்.ஆர்.எம்., குழுமம் புகார் சுற்றுலா வளர்ச்சி கழகம் மீது எஸ்.ஆர்.எம்., குழுமம் புகார்
சுற்றுலா வளர்ச்சி கழகம் மீது எஸ்.ஆர்.எம்., குழுமம் புகார்
சுற்றுலா வளர்ச்சி கழகம் மீது எஸ்.ஆர்.எம்., குழுமம் புகார்
சுற்றுலா வளர்ச்சி கழகம் மீது எஸ்.ஆர்.எம்., குழுமம் புகார்
ADDED : ஜூன் 16, 2024 01:31 AM
திருச்சி:'எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் பரப்புகிறது' என, எஸ்.ஆர்.எம்., குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து, அக்குழுமம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 1996 முதல் ஒப்பந்தப்படி, அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வாடகையையும் பாக்கியில்லாமல் செலுத்தி உள்ளோம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, உயர்வு தொகையும் முழுமையாக செலுத்தப்பட்டது.
இப்படி 30 ஆண்டுகளுக்கான ஒப்பந்த தொகையையும் செலுத்தி விட்டோம். கடந்த 2018ம் ஆண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடாத அதிக தொகையை செலுத்த, சுற்றுலா வளர்ச்சி கழகம் வற்புறுத்தியது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தியாவில் 2017ல் ஜி.எஸ்.டி., அறிமுகமானது. ஆனால், 2003 முதல் வரித்தொகை கணக்கிடப்பட்டு, எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. 2021 முதல், 2024 வரையிலான பாக்கி தொகை நிலுவையில் இருப்பதாக கூறி, 12 கோடி ரூபாய் கட்ட, கடந்த, 4ம் தேதி சுற்றுலா வளர்ச்சி கழகம் கடிதம் அனுப்பியது.
இது எந்த ஒப்பந்தத்திலும் குறிப்பிடாத ஒன்று. சுற்றுலா வளர்ச்சி கழகம் ஊடகங்களில் அளித்து வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. குத்தகை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுகுறித்த விபரங்களை பொதுவெளியில் வெளியிடுவது சரியானது அல்ல எனவும் எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.