/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ திருச்சி ஏர்போர்ட்டில் 2.6 கிலோ தங்கம் சிக்கியது திருச்சி ஏர்போர்ட்டில் 2.6 கிலோ தங்கம் சிக்கியது
திருச்சி ஏர்போர்ட்டில் 2.6 கிலோ தங்கம் சிக்கியது
திருச்சி ஏர்போர்ட்டில் 2.6 கிலோ தங்கம் சிக்கியது
திருச்சி ஏர்போர்ட்டில் 2.6 கிலோ தங்கம் சிக்கியது
ADDED : ஜூன் 15, 2024 07:16 AM

திருச்சி : ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, திருச்சி வந்த ஏர் இந்தியா விமான பயணியரிடம் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஆண் பயணி ஒருவர், ஜூஸ் தயாரிக்கும் இயந்திரம், உணவு பதப்படுத்துதல் இயந்திரம் ஆகியவற்றின் உள்ளே மறைத்து வைத்து, 2,579 கிராம் தங்கம் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
இதன் மதிப்பு 1.83 கோடி ரூபாய். கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றி விசாரிக்கின்றனர். திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட்ட சில நாட்களில் கிலோ கணக்கில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.