/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ யானை தந்தம் விற்க முயற்சி 4 பேர் கைது யானை தந்தம் விற்க முயற்சி 4 பேர் கைது
யானை தந்தம் விற்க முயற்சி 4 பேர் கைது
யானை தந்தம் விற்க முயற்சி 4 பேர் கைது
யானை தந்தம் விற்க முயற்சி 4 பேர் கைது
ADDED : ஜூன் 16, 2024 02:08 AM
திருச்சி:திருச்சியில் யானை தந்தத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ய உள்ளதாக, மத்திய வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், எடமலைப்பட்டி புதுார், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சேதுராப்பட்டி போன்ற இடங்களில் வனத்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், 46, என்பவர் வீட்டில், 2.9 கிலோ யானை தந்தம், மான் தோல் ஆகியவை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் ஸ்ரீதர், அவரது கூட்டாளிகள் வெங்கடசுப்பிரமணியன், 63, முரளி, 51, பாண்டுரெங்கன், 60, ஆகிய, நால்வரை கைது செய்தனர்.