/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ இயந்திரத்தில் கை சிக்கி துப்புரவு பணியாளர் காயம் இயந்திரத்தில் கை சிக்கி துப்புரவு பணியாளர் காயம்
இயந்திரத்தில் கை சிக்கி துப்புரவு பணியாளர் காயம்
இயந்திரத்தில் கை சிக்கி துப்புரவு பணியாளர் காயம்
இயந்திரத்தில் கை சிக்கி துப்புரவு பணியாளர் காயம்
ADDED : ஜூலை 23, 2024 09:01 PM
திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்ப்பவர் சரசு, 50. நேற்று காலை, துறையூர் பள்ளி அருகே உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் உள்ள குப்பை பிரிக்கும் இயந்திரத்தில், குப்பைகளை பிரித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது வலது கை, இயந்திரத்தில் சிக்கி, அவரது தோள்பட்டை வரை இழுத்து, படுகாயம் அடைந்தார்.
உடனடியாக இயந்திரத்தை நிறுத்தி, சரசுவை மீட்ட சக ஊழியர்கள், அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின், மேல் சிகிச்சைக்காக அவர், திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். துறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.