/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ சர்வேயர் மற்றும் வி.ஏ.ஓ., லஞ்சம் வாங்கியதால் கைது சர்வேயர் மற்றும் வி.ஏ.ஓ., லஞ்சம் வாங்கியதால் கைது
சர்வேயர் மற்றும் வி.ஏ.ஓ., லஞ்சம் வாங்கியதால் கைது
சர்வேயர் மற்றும் வி.ஏ.ஓ., லஞ்சம் வாங்கியதால் கைது
சர்வேயர் மற்றும் வி.ஏ.ஓ., லஞ்சம் வாங்கியதால் கைது
ADDED : ஜூலை 23, 2024 09:16 PM

திருச்சி:திருச்சி, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த முனியப்பன், 59, என்பவர் அதே பகுதியில், மளிகை கடை நடத்துகிறார். இவர், திருச்சி, கொட்டப்பட்டு கிராமத்தில் 1,200 சதுர அடி வீட்டு மனை வாங்கினார். அதை உட்பிரிவு செய்து, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக, 11ம் தேதி, திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, கொட்டப்பட்டு பகுதிக்கான சர்வேயர் முருகேசன், 34, என்பவர், 10,000 ரூபாய் கொடுத்தால் தான், உட்பிரிவு செய்து தர முடியும், என்று முருகேசன் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார், தாசில்தார் அலுவலகத்தில், முனியப்பனிடம் இருந்து பணம் வாங்கிய சர்வேயர் முருகேசனை கைது செய்தனர்.
*வி.ஏ.ஓ., கைது:
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலக்குறிச்சியை சேர்ந்தவர் சிவக்குமார், அவர் வாங்கிய நிலத்துக்கு, பட்டா மாறுதல் செய்வதற்காக, வி.ஏ.ஓ., அப்பாதுரை, 49, என்பவரை அணுகினார். பட்டா மாறுதல் செய்வதற்கு, அப்பாத்துரை, 50,000 ரூபாய் லஞ்சமாக கேட்டார்.
இது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் சிவக்குமார் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி, பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இசேவை மையத்தில், வி.ஏ.ஓ., அப்பாதுரையிடம் சிவக்குமார் பணத்தை கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ.,வை கைது செய்தனர்.