/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ 63 சவரன் நகை ரூ.18 லட்சம் துணிகர திருட்டு 63 சவரன் நகை ரூ.18 லட்சம் துணிகர திருட்டு
63 சவரன் நகை ரூ.18 லட்சம் துணிகர திருட்டு
63 சவரன் நகை ரூ.18 லட்சம் துணிகர திருட்டு
63 சவரன் நகை ரூ.18 லட்சம் துணிகர திருட்டு
ADDED : ஜூன் 11, 2024 08:43 PM
திருச்சி:திருச்சி மாவட்டம், வையம்பட்டி அடுத்துள்ள இளங்காகுறிச்சியை சேர்ந்தவர் சையத் அலி, 31. இவரது மனைவி பாத்திமா. சையத் அலி, ஜூன் 6ம் தேதி வீட்டை பூட்டி குடும்பத்துடன் ஏர்வாடி சென்று விட்டார்.
நேற்று முன்தினம் வீடு திரும்பிய சையத் அலி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்ற பார்த்தபோது, அங்கு பீரோவில் வைத்திருந்த, 63 சவரன் நகை மற்றும் 18 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. சையத் அலி போலீசில் புகார் அளித்தார். வையம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.