/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ அசைவ உணவு சாப்பிட்டதால் தி.மலை கோவிலில் பரிகாரம் அசைவ உணவு சாப்பிட்டதால் தி.மலை கோவிலில் பரிகாரம்
அசைவ உணவு சாப்பிட்டதால் தி.மலை கோவிலில் பரிகாரம்
அசைவ உணவு சாப்பிட்டதால் தி.மலை கோவிலில் பரிகாரம்
அசைவ உணவு சாப்பிட்டதால் தி.மலை கோவிலில் பரிகாரம்
ADDED : ஜூன் 11, 2025 02:45 AM

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில், இருவர் அசைவ உணவு சாப்பிட்டதால் பரிகார பூஜை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் புனிதத்தை கெடுக்கும் வகையில், நேற்று முன்தினம் திருவண்ணாமலை, ராமலிங்கனார் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவர், தன் மனைவியுடன் முட்டை பிரியாணி, சிக்கன் கிரேவியுடன் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து சாப்பிட்டார்.
கோவில் ஊழியர்கள் இருவரையும் பிடித்து, திருவண்ணாமலை டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் அசைவ உணவு சாப்பிட்டதால் ஏற்பட்ட தோஷம் போக்க, கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவர் கருவறையின் எதிரிலுள்ள சூரிய பகவானுக்கு, புனித கலசங்கள் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தபன பூஜை செய்யப்பட்டது.
பின், புனித நீர் கொண்டு, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவிலின் ராஜகோபுரம், பெரிய நந்தி என கோவில் வளாகத்திலுள்ள அனைத்து சன்னிதிகளிலும் புனித நீர் தெளித்து, பிராயசித்த பூஜை செய்யப்பட்டது.