/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ தேர்தல் விதிமீறல் வழக்கில் அமைச்சர் வேலு விடுவிப்பு தேர்தல் விதிமீறல் வழக்கில் அமைச்சர் வேலு விடுவிப்பு
தேர்தல் விதிமீறல் வழக்கில் அமைச்சர் வேலு விடுவிப்பு
தேர்தல் விதிமீறல் வழக்கில் அமைச்சர் வேலு விடுவிப்பு
தேர்தல் விதிமீறல் வழக்கில் அமைச்சர் வேலு விடுவிப்பு
ADDED : ஜூன் 11, 2025 01:40 AM
திருவண்ணாமலை,அமைச்சர் வேலு மீதான, தேர்தல் விதி மீறல் வழக்கிலிருந்து அவரை விடுவித்து, வழக்கையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் கடந்த, 2011 மார்ச், 29ல், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், தி.மு.க., வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, கல்வி நிறுவனத்தில் அறிமுக கூட்டம் நடத்தியது, உணவு வழங்கியது, இலவச பொருட்கள் வழங்கியது என, தேர்தல் நடத்தை விதிகளை மீறி அக்கூட்டம் நடத்தப்பட்டதாக, செய்யாறு ஆர்.டி.ஓ., செய்யாறு போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி, தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, தற்போதையை கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத், காங்., முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட, 6 பேர் மீது வழக்கு பதிந்து, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள குற்றவியல் நடுவர் நீதித்துறை நீதிமன்றம் - 1ல் வழக்கு நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி, உரிய ஆதாரங்கள் இல்லாததால், வழக்கிலிருந்து அமைச்சர் வேலு, காங்., - எம்.பி., விஷ்ணு பிரசாத், அவரது தந்தை கிருஷ்ணசாமி உள்ளிட்ட, 6 பேரையும் விடுவித்து, வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.