/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/திருவண்ணாமலையில் வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைதுதிருவண்ணாமலையில் வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது
திருவண்ணாமலையில் வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது
திருவண்ணாமலையில் வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது
திருவண்ணாமலையில் வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது
ADDED : மார் 19, 2025 05:40 PM

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தியானத்தில் இருந்த பிரான்சை சேர்ந்த பெண்ணிடம் பாலியல் ரீதியில் அத்துமீறிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ள திருவண்ணாமலைக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து ஏராளமானோர் வந்து ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 46 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஆசிரமத்தில் தங்கி ஆன்மிகம் மற்றும் தியான பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
சுற்றுலா வழிகாட்டி மூலம் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையில் ஒரு குகையில் அந்த பெண் தியானத்தில் ஈடுபட்டு இருந்தார். அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண், நேற்று போலீசில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வெளிநாட்டு பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் அளித்த அடையாளங்களின் அடிப்படையில், வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.