/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ திருவண்ணாமலை ரயில் பாதை துரிதப்படுத்த பா.ஜ., வலியுறுத்தல் திருவண்ணாமலை ரயில் பாதை துரிதப்படுத்த பா.ஜ., வலியுறுத்தல்
திருவண்ணாமலை ரயில் பாதை துரிதப்படுத்த பா.ஜ., வலியுறுத்தல்
திருவண்ணாமலை ரயில் பாதை துரிதப்படுத்த பா.ஜ., வலியுறுத்தல்
திருவண்ணாமலை ரயில் பாதை துரிதப்படுத்த பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : மார் 19, 2025 07:43 AM

சென்னை : 'திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் எடுப்பு பணியை, தி.மு.க., அரசு உடனடியாக துரிதப்படுத்த வேண்டும்' என, தமிழக பா.ஜ., மாநிலச் செயலர் அஸ்வத்தாமன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க.,வின் அலட்சியத்தால், 'திண்டிவனம் -- திருவண்ணாமலை' ரயில் பாதை திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் திருவண்ணாமலைக்கு தினசரி வந்து செல்கின்றனர்.
ஆனால், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் பாதை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, 'திருவண்ணாமலை - திண்டிவனம் இடையே, ரயில் பாதை அமைத்து, சென்னையில் இருந்து நேரடி ரயில் சேவை துவக்கப்படும்' என, பா.ஜ., தரப்பில் தேர்தல் வாக்குறுதி அளித்தோம்.
இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், உள்ளுர் மக்களின் வாழ்வாதாரம் உயர்வதோடு, புதுச்சேரி - பெங்களூரு மார்க்கத்தை இணைக்கும் வகையில், இத்திட்டம் அமையும்.
இத்திட்டத்தை மத்திய அரசு, பல ஆண்டுகளுக்கு முன் முன்னெடுத்தது.
ஒதுக்கப்பட்ட பாதையில், எட்டு இடங்களில், ரயில்வே மேம்பாலங்களை கட்டிவிட்டது. ஆனால், தி.மு.க., அரசு நிலம் எடுப்பு பணியை துவங்காததால், இத்திட்டம் கிடப்பில் உள்ளது.
ரயில் பாதை அமைக்கும் பணி, மத்திய அரசிடம் இருந்தாலும், மாநில அரசு நிலம் எடுத்தால் மட்டுமே, திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
எனவே, திட்டத்திற்கு நிலம் எடுப்பு பணியை, தி.மு.க., அரசு உடனடியாக துரிதப்படுத்த வேண்டும்.
முதல்வரும், திருவண்ணாமலையைச் சேர்ந்த அமைச்சர் வேலுவும், மக்களை மடைமாற்றும் அற்ப அரசியலில் கவனம் செலுத்துவதை விடுத்து, மக்களுக்கு அவசிய தேவையானவற்றில், உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.