/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ பள்ளம் தோண்டிய போது இடிந்தது வீடு; 5 பேர் மீட்பு பள்ளம் தோண்டிய போது இடிந்தது வீடு; 5 பேர் மீட்பு
பள்ளம் தோண்டிய போது இடிந்தது வீடு; 5 பேர் மீட்பு
பள்ளம் தோண்டிய போது இடிந்தது வீடு; 5 பேர் மீட்பு
பள்ளம் தோண்டிய போது இடிந்தது வீடு; 5 பேர் மீட்பு
ADDED : மார் 19, 2025 01:53 AM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாட வீதியில் சிமென்ட் சாலை அமைக்க, கழிவுநீர் கால்வாய் தோண்டிய போது வீடு இடிந்தது. இடிபாடுகளில் சிக்கிய, ஐந்து பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
திருவண்ணாமலை மாட வீதியில், சிமென்ட் சாலை அமைக்கும், 2ம் கட்ட பணி ஒரு மாதமாக நடக்கிறது. இதற்காக மாட வீதியான திருவூடல் வீதியில், கழிவுநீர் கால்வாய் அமைக்க, பொக்லைன் இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டும் பணி நடந்தது.
அப்போது, ஒரு வீட்டை ஒட்டி பள்ளம் தோண்டியபோது, திடீரென வீட்டின் படிக்கட்டுகள் இடிந்து சரிந்தன. அந்த வீடு பழைய கட்டடம் என்பதால், அதன் அஸ்திவார கட்டுமானம் இடிந்து விழுந்தது. இதனால் வீட்டிற்குள் சிக்கிய, ஐந்து பேர் கூச்சலிட்டனர். திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய, ௫ பேரையும் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க அறிவுறுத்தி, அனுப்பி வைத்தனர்.