/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ பேச மறுத்த காதலியை கொன்ற காதலன் கைது பேச மறுத்த காதலியை கொன்ற காதலன் கைது
பேச மறுத்த காதலியை கொன்ற காதலன் கைது
பேச மறுத்த காதலியை கொன்ற காதலன் கைது
பேச மறுத்த காதலியை கொன்ற காதலன் கைது
ADDED : மார் 17, 2025 02:02 AM
கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே பேச மறுத்த காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், அலங்காரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 25. பாடகத்தைச் சேர்ந்தவர் ரோஷினி, 22. இருவரும் போலீசில் சேர கலசப்பாக்கத்தில் தனியார் அகாடமியில் படித்து வந்தனர்.
இரு ஆண்டுகளாக இருவரும் காதலித்த நிலையில், அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில், சக்திவேலுவுடன் பேசுவதை தவிர்த்தார். பலமுறை சக்திவேல் வற்புறுத்தியும் அவர் பேசவில்லை.
நேற்று முன்தினம் காலை ரோஷினி, கலசப்பாக்கத்திலுள்ள பயிற்சி அகாடமிக்கு படிக்க சென்றார். மாலையில் வீடு திரும்பாததால், போலீசில் பெற்றோர் புகாரளித்தனர். சக்திவேலிடம் மங்கலம் போலீசார் விசாரித்தனர்.
ரோஷினி பேச மறுத்ததால், அவரது கழுத்தை நெரித்து கொன்று, சடலத்தை அப்பகுதியில் கிணற்றில் வீசியதாக அவர் கூறினார். சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.