ADDED : ஜூன் 27, 2025 11:35 PM

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள குப்பை பிரச்னைகள் குறித்து சென்னையில் உள்ள மூத்த அதிகாரிகள் சில வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளனர். அதன்படி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் எந்த தரப்பும் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். போக்குவரத்து நெருக்கடி பிரச்னை குறித்தும் ரோடுகள் தரமாக அமைக்கப்படுவது குறித்தும் உரிய கவனம் செலுத்தப்படும்.
குடிநீரைப் பொறுத்தவரை குடிநீர் திட்டம் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் எந்தப் பற்றாக்குறையும் ஏற்படாது. குடிநீர் திட்டத்தில் பணிகள் முழுமையாக விரைந்து செய்து முடிக்கப்படும். துாய்மை பணியாளர் ஊதியம், வரி விதிப்பு மற்றும் வரி வசூலில் உள்ள பிரச்னைகள் குறித்து துறை வாரியாக ஆய்வுக்கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கை உரிய அரசு வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்படும். அலுவலர்கள் காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் நகராட்சி நிர்வாகத்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகள் குறித்த பிரச்னைகளில் கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்படும்; பொதுமக்கள் தரப்பிலும் கருத்துகள், ஆலோசனை கேட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
- அமித், மாநகராட்சி கமிஷனர், திருப்பூர்.