Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 22 லட்சம் விருட்சம்; இயற்கையின் சொர்க்கம்

22 லட்சம் விருட்சம்; இயற்கையின் சொர்க்கம்

22 லட்சம் விருட்சம்; இயற்கையின் சொர்க்கம்

22 லட்சம் விருட்சம்; இயற்கையின் சொர்க்கம்

ADDED : ஜூன் 27, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
2015ம் ஆண்டு

மங்கலம், அக்ரஹாரபுத்துார், பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் நடப்பட்ட நாவல், வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரங்கள் பசுமைப்பரப்பை விரித்திருக்கின்றன.

வியர்க்கிறது பூமிக்கு... விசிறி தேவைப்படுகிறது

திணறுகிறது நுரையீரல்... பிராண வாயு வேண்டும்

மரங்கள் - பூமிக்கு விசிறி; ஜீவராசிகளுக்கு உயிர்ப்பு

2016ம் ஆண்டு

பூலுவபட்டி, அய்யப்பா நகர் பகுதியில் நடப்பட்ட தேக்கு மரங்கள், இயற்கையின் வலிமையைக் கூட்டியிருக்கின்றன.

புவி விசை எதிர்த்து வளர்வான்

மண் மகிமை காத்து நிற்பான்

மரங்களுக்கு நிகருண்டோ!

2017ம் ஆண்டு

அவிநாசியில் நடப்பட்ட செம்மரங்கள், செம்மையாய் வளர்ந்திருக்கின்றன.

மரம் - சிருஷ்டியில் ஒரு சித்திரம்

பூமியின் ஆச்சர்யக் குறி

நெஞ்சு ஊறும் அனுபவம்

2018ம் ஆண்டு

ஆதியூரில் நடப்பட்ட மலை வேம்பு, இன்று காட்சி தருகிறது தெம்புடன்.

நாட்டுக்காக இல்லாவிட்டாலும் நம் வீட்டுக்காக...

காட்டுக்காக இல்லாவிட்டாலும் நற்காற்றுக்காக...

மரம் வளர்ப்போம்; வளர்ந்த மரங்களைக் காப்போம்

2019ம் ஆண்டு

சடையாம்பதியில் நடப்பட்ட பீய மரம் மற்றும் மலை வேம்பு மரங்கள் உயர்ந்தோங்கி வளர்ந்துள்ளன.

பூ தரும் ஒரு மரம்

நார் தரும் மறு மரம்

கனி தரும் இன்னொரு மரம்

குணம் தரும் வேறொரு மரம்

மரமல்லவா வரம்!

2020ம் ஆண்டு.

காளிபாளையத்தில் நடப்பட்ட தேக்கு மரங்களைப் பார்த்தாலே, எஃகு போன்ற மன உறுதி நம்முள் எழுகிறது.

உண்ணக் கனி

ஒதுங்க நிழல்

உடலுக்கு மருந்து

உணர்வுக்கு விருந்து

அழகு வேலி

ஆடாத் துாழி

மரங்களின் மகிமையை

என்னவென்று உரைக்க!

2021ம் ஆண்டு

தெக்கலுாரில் நடப்பட்ட செம்மரங்கள் கம்பீரமாக அணிவகுக்கின்றன.

சோறின்றியும் இருக்கலாம் பல நாட்கள்...

தண்ணீரின்றியும் வாழலாம் சில நாட்கள்...

மூச்சின்றி கண நேரம் வாழ்வதும் கடினமல்லவா?

நம்மைக் காப்பது மரங்கள் தானல்லவா?

2022

செங்கப்பள்ளி பைபாஸ் சாலையோரம் தேக்கு மரங்கள் பிரமாண்டமாகப் போகின்றன.

மரத்தில் இருந்து பசுமை இலைகள் உதிர்ந்துவிடலாம்; காற்று வீசும் நாளில், அவை எழுந்து களிநடனம் புரிவதைப் பார்த்தீர்கள் எனில், அவற்றின் மகிழ்ச்சி புரியும்; நம் உள்ளம் நிறையும்; அவை இறந்துவிட்டன என்று எப்படிச் சொல்வீர்கள்?

2023

பூமலுார் பகுதியில் நடப்பட்ட மலை வேம்பு, இப்போது அடர்ந்த காடாக, அழகுததும்ப காட்சி தருகின்றன.

தேடி விழிகள் அழும்; கோடி தலைகள் வீழும் ஆனால், மரங்கள் இன்றி துளி நீரையும் மேகக்கூட்டங்கள் பொழியாது.

2024

சாமளாபுரம், காளிபாளையம், கரிய காளியம்மன் கோவில் வளாகத்தில் உருவாக்கப்பட்ட போகர் வனம்.

மரம் வளர்ப்பது தொடர்பாக, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறிய உறுதிமொழி: நான் என் வீட்டிலோ, காட்டிலோ, பள்ளிக்கூடத்திலோ, வேலை இடத்திலோ 10 மரங்களை நட்டு, அவற்றைப் பாதுகாப்பேன்; நான் என் குழந்தைகளை மரம் நட்டு வளர்க்க ஊக்குவிப்பேன். எனது அழியாச் சொத்தாக மரங்களை, என் சந்ததிக்கு விட்டுச் செல்வேன்; நுாறு கோடி மரம் நடும் இயக்கத்தில் என்னை ஈடுபடுத்தி, அதை சிரமேற்கொண்டு, செயல்படுத்துவேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us