/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநகராட்சி கமிஷனருக்கு காத்திருக்கும் சவால்கள் மாநகராட்சி கமிஷனருக்கு காத்திருக்கும் சவால்கள்
மாநகராட்சி கமிஷனருக்கு காத்திருக்கும் சவால்கள்
மாநகராட்சி கமிஷனருக்கு காத்திருக்கும் சவால்கள்
மாநகராட்சி கமிஷனருக்கு காத்திருக்கும் சவால்கள்
குப்பைகள் தலைவலி
மாநகரில் தினமும் சராசரியாக 800 டன் என்ற அளவில் குப்பை கழிவுகள் சேகரமாகிறது. இதில், 50 டன் என்ற குறைந்த அளவில் காய்கறி கழிவுகள் மட்டும் நுண்ணுயிர் உர உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற கழிவுகள், பாறைக்குழிகளில் கொட்ட எதிர்ப்பு கிளம்பியுள்ளது, மாநகராட்சிக்கு சவாலாகியுள்ளது. குப்பை கழிவுகளை மறு சுழற்சி, மறு பயன்பாடு, மாற்று எரிசக்தி போன்ற வழிகளில் கையாள திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இவை நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
ரோடுகள் மோசம்
பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்க குழிகள் தோண்டி முறையாக மூடாமல் ரோடுகள் மோசமாக உள்ளது. நகரில் போக்குவரத்து நெருக்கடி, எரிபொருள் விரயம், கால விரயம் அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக, வார்டுகளுக்குள் பல பகுதிகளில், ரோடுகளின் நிலைமை படுமோசமாக இருக்கிறது.
ஆக்கிரமிப்புகள்
மோசமான ரோடு மட்டுமின்றி, போக்குவரத்து நெருக்கடி மற்றும் வாகன நெரிசலுக்கு முக்கிய காரணமாக ரோட்டோர ஆக்கிரமிப்புகள் தான். ஆக்கிரமிப்புகளைப் பொறுத்த வரை அரசியல் தலையீடு, மாமூல் வசூல் அதிகளவில் உள்ளது.
வடிகால் வசதியில்லை
நகரப் பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் உரிய மழை நீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வசதியில்லாத நிலை உள்ளது. மழைக்காலத்தில் அப்பகுதியினர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஒளிராத விளக்கு
தெரு விளக்குகளைப் பொறுத்தவரை பிரதான ரோடுகள் மற்றும் வீதிகளில் உரிய எண்ணிக்கையில் விளக்குகள் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. பல்லாயிரம் தெரு விளக்குகளுக்கு நிதி ஒதுக்கி, அவை தருவிக்கப்பட்ட நிலையிலும், மின் இணைப்புகள் பெறுவதில் நிலவும் தாமதம் இந்த விளக்குகளை எரிய விடாமல் செய்கிறது.
வதைக்கும் வரி உயர்வு
மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் கட்டட அனுமதி கட்டடணம் மிக அதிகம் என்ற குற்றச்சாட்டும், அதற்கு எதிரான போராட்டங்களும் அதிகரித்துள்ளது. இதில் உரிய கவனம் செலுத்துவதோடு, பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிைவேற்றும் வகையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். இதில் மிக முக்கியமாக திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம் கடும் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.பல இடங்களில் நீண்ட காலம் பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள், புதிதாக கட்டிய கட்டடங்கள் அங்கீகாரமின்றியும், வரி விதிப்பு செய்யப்படாமலும் உள்ளது. இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
வருவாய் இழப்பு
குறிப்பாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட டவுன்ஹால் பல்நோக்கு அரங்கம் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதேபோல, பல கட்டடங்களாலும், வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்டிலும் இதே நிலை தான். வருவாய்க்காக கட்டப்பட்ட கடைகள் பெரும்பாலானவை காலியாகவே கிடக்கிறது.