/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.96 லட்சம் நல உதவி மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.96 லட்சம் நல உதவி
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.96 லட்சம் நல உதவி
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.96 லட்சம் நல உதவி
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.96 லட்சம் நல உதவி
ADDED : ஜூன் 12, 2025 01:17 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு சார்பில், இலவச செயற்கை அவயம் மற்றும் உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி, செட்டிபாளையம் 'ஸ்போர்ட்ஸ் மற்றும் பிட்னஸ் அகாடமி' வளாகத்தில் நடந்தது.
செயற்கை அவயம் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு, கடந்த மாதம் அளவீடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கு, 1.96 லட்சம் ரூபாய் செயற்கை அவயம், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காற்றுப்படுக்கை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருப்பூர் ஸ்போர்ட்ஸ் மற்றும் பிட்னஸ் அகாடமி நிதி உதவியுடன், இவை வழங்கப்பட்டன. சக் ஷம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராமசாமி தலைமை வகித்தனர்.
சக் ஷம் மாவட்ட செயாலளர் தமிழ்ச்செல்வம், செயலாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தனர். அகாடமி நிர்வாகிகள் நவமணி, வெள்ளியங்கிரி, தங்கமுத்து உள்ளிட்டோர், பயனாளிகளுக்கு செயற்கை அவயங்களை வழங்கினர்.