/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாலத்தில் வீசப்பட்ட இறைச்சிக்கழிவுகள் பாலத்தில் வீசப்பட்ட இறைச்சிக்கழிவுகள்
பாலத்தில் வீசப்பட்ட இறைச்சிக்கழிவுகள்
பாலத்தில் வீசப்பட்ட இறைச்சிக்கழிவுகள்
பாலத்தில் வீசப்பட்ட இறைச்சிக்கழிவுகள்
ADDED : ஜூன் 12, 2025 01:20 AM

அவிநாசி : அவிநாசி, நடுவச்சேரி ரோட்டில், ராயம்பாளையம் பிரிவு பாலம் அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஒரு சாக்கு மூட்டை முழுவதுமாக கோழி இறைச்சி கழிவுகளை கொண்டு வந்த மர்ம நபர், நேற்று காலை பாலம் மீது வீசிச் சென்றுள்ளார்.
தெரு நாய்கள் ஆங்காங்கே கழிவுகளை சாப்பிட்டு விட்டு போட்டு சென்றதால் பாலம் முழுவதும் இறைச்சி கழிவுகள் சிதறி கிடந்தன. துர்நாற்றமும் வீச துவங்கியது.
தெருநாய்கள் சுற்றி வந்ததால், பாலத்தின் மீது யாரும் நடக்க முடியவில்லை. வாகனங்களிலும் செல்ல இயலவில்லை.
ராயம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி கூறுகையில், ''இறைச்சிக் கழிவுகளை உண்டு பழகிய தெரு நாய்கள், மனிதர்களையும், ஆடுகளையும் விட்டு வைப்பதில்லை.
நகராட்சி நிர்வாகம் இறைச்சிக்கழிவுகளை கொட்டுவோருக்கு அபராதம் விதிப்பதோடு, கழிவுகளை முறையாக அகற்றவும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்'' என்றார்.