/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நிறைவேறாத கோரிக்கைகள் மா.கம்யூ., பிரசார பயணம் நிறைவேறாத கோரிக்கைகள் மா.கம்யூ., பிரசார பயணம்
நிறைவேறாத கோரிக்கைகள் மா.கம்யூ., பிரசார பயணம்
நிறைவேறாத கோரிக்கைகள் மா.கம்யூ., பிரசார பயணம்
நிறைவேறாத கோரிக்கைகள் மா.கம்யூ., பிரசார பயணம்
ADDED : ஜூன் 20, 2025 06:18 AM

உடுமலை : நகர மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில், பிரசார நடை பயணம் உடுமலையில் நடந்தது.
இந்த நடை பயணத்துக்கு மா.கம்யூ., நகர செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன் துவக்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இதில், உடுமலை பசுபதி வீதியில் மக்களுக்கு இடையூறாக உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையை இடம் மாற்ற வேண்டும். வாரச்சந்தை வளாகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
நகரில் அரசுக்கு சொந்தமான இடத்தில், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்க வேண்டும். உடுமலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் சென்று மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தனர்.