/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருப்பூர் அருகே 24 வங்க தேசத்தினர் கைது திருப்பூர் அருகே 24 வங்க தேசத்தினர் கைது
திருப்பூர் அருகே 24 வங்க தேசத்தினர் கைது
திருப்பூர் அருகே 24 வங்க தேசத்தினர் கைது
திருப்பூர் அருகே 24 வங்க தேசத்தினர் கைது
ADDED : ஜூன் 20, 2025 06:15 AM

பல்லடம் : திருப்பூர் அருகே, சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 24 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில், வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக தங்கியிருப்பது குறித்து, 'க்யூ பிராஞ்ச்' போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சின்னக்கரை, அருள்புரம், குன்னாங்கல்பாளையம் பகுதிகளில் முகாமிட்ட போலீசார், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சோதனையிட்டனர். நேற்றுமுன்தினம் இரவு மேற்கொண்ட சோதனையில், 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
தற்போது வசித்து வரும் முகவரி, எத்தனை நாட்களாக இங்கு வசிக்கின்றனர், வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு எவ்வாறு வந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடந்தது. போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி, 6 மாதங்களுக்கு மேல் இங்கு சட்ட விரோதமாக தங்கி இருந்தபடி, பல்வேறு பனியன் நிறுவனங்களில், டெய்லர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களது உண்மையான பெயர், முகவரி மற்றும் கைரேகை, அங்க அடையாளங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன.
கைதானவர்கள் விவரம்: அப்துல் ஹாலிக், 33, அமித், 37, ஹமீதுல் ஜானல், 38, மோனீர், 37, சுமன், 40, முகமது அலி அக்தர், 35, ஹசன் ஹபீப், 39, ஹலோ கிரா, 32, ஏர்சாத், 38, ஷோகித், 32, சித்திக், 33, முக்லேஷ், 54, முகமது ஹாய் நுார், 19, முகமது ஹமத், 41, போலஜ், 19, ஹாரி புல், 20, பாரக், 45, பைஜில், 42, சாதிக் முல்லா, 26, சுமன், 37, முகமது ஜோனல், 40, ராசல், 42, அஜாத், 34, ஜன்னத், 27.
மருத்துவ பரிசோதனைக்கு பின் இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோர்ட் உத்தரவின்படி, 24 பேரையும் புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.