Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'இ-நாம்' திட்டத்தில் கொப்பரை ஏலம்

'இ-நாம்' திட்டத்தில் கொப்பரை ஏலம்

'இ-நாம்' திட்டத்தில் கொப்பரை ஏலம்

'இ-நாம்' திட்டத்தில் கொப்பரை ஏலம்

ADDED : ஜூன் 20, 2025 06:20 AM


Google News
Latest Tamil News
உடுமலை : உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த ஏலத்தில், கொப்பரை கிலோவுக்கு அதிகபட்சமாக, 236.20 ரூபாய் விலை கிடைத்தது.

மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டத்தின் கீழ், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நடைபெறுகிறது. நேற்று நடந்த ஏலத்தில், 39 மூட்டை கொப்பரை ஏலத்துக்கு வந்தது.

இதில், முதல் தரம் கிலோ ஒன்றுக்கு ரூ.220 முதல் ரூ. 236.20 வரையும், இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு ரூ.164 முதல் ரூ.203.16 வரையும் இ-நாம் இணைய தளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் விடப்பட்டது.

ஏலம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, விற்பனை கூட கண்காணிப்பாளரை, 9443962834 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, திருப்பூர் மாவட்ட விற்பனை குழுவினர் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us