Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நினைவுத்திறனை அதிகரிக்க...

நினைவுத்திறனை அதிகரிக்க...

நினைவுத்திறனை அதிகரிக்க...

நினைவுத்திறனை அதிகரிக்க...

ADDED : பிப் 23, 2024 08:33 PM


Google News
Latest Tamil News
தேர்வை சிறப்பாக எழுத, நினைவுத்திறன் என்பது மிகமிக அவசியமானது. மனப்பாடம் செய்து எழுதும் அம்சமாக நமது தேர்வுகள் இருப்பதால், படித்தவை அனைத்தும் நினைவில் இருந்தால் மட்டுமே, நாம் முதல் மதிப்பெண்களைப் பெற முடியும்.

நினைவுத்திறன், சிலருக்கு, இயல்பாகவே அதிகம் இருக்கும். எனவே, அவர்களுக்கு எந்தப் பிரச்னையுமில்லை. நினைவுத்திறனை அதிகரிக்க, தியானம் மற்றும் யோகா போன்றவை, பரவலாக பரிந்துரை செய்யப்படுகின்றன. மேலும், சிலவகை குறிப்பிட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை அதிகமாக உண்ணுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவை தவிர, மூலிகை மருந்துகள் உள்ளிட்ட சிலவகை மருந்துகளும் பரிந்துரை செய்யப்படுகின்றன. (நினைவுத்திறன் அதிகரிக்க வேண்டுமென்பதற்காக, ஆர்வம் மிகுதியால், யாரோ சொல்கிறார்கள் என்று, எந்த மருந்தையாவது வாங்கி பயன்படுத்திவிட வேண்டாம். அப்படி நீங்கள் எதையாவது செய்துவிட்டால், தேர்வு சமயத்தில் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கலாம். எனவே, ஜாக்கிரதை!)

படித்ததை, திரும்ப திரும்ப படித்தாலே, அது மறக்காது நினைவில் நிற்கும் என்றும் சில ஆலோசகர்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும், படித்ததை எழுதிப் பாருங்கள் என்ற ஆலோசனையும் முக்கியமானது. அதேசமயம், அனைத்தையுமே எழுதிப் பார்த்துக்கொண்டிருக்கவும் முடியாது.

ஒரு பாடத்தை, வெறுமனே மொட்டையாக மனப்பாடம் செய்யாமல், அதை முடிந்தளவிற்கு புரிந்து, வேறு அம்சங்களோடு சம்பந்தப்படுத்தி மனப்பாடம் செய்தால், அது எளிதில் மறக்காது.

நினைவுத்திறனை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்த பல ஆலோசனைகள் கல்விமலர் இணையதளத்தில் குவிந்து கிடக்கின்றன. எனவே, அந்த இணையதளத்திற்கு சென்று, அதற்கான பயன்மிகு ஆலோசனைகளைப் படித்து, தேர்வெழுதப்போகும் மாணவர்கள், தங்களின் நினைவுதிறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us