/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கயிலாய வாத்தியங்கள் முழங்க வலம் வந்த தீர்த்தக்கலசங்கள் கயிலாய வாத்தியங்கள் முழங்க வலம் வந்த தீர்த்தக்கலசங்கள்
கயிலாய வாத்தியங்கள் முழங்க வலம் வந்த தீர்த்தக்கலசங்கள்
கயிலாய வாத்தியங்கள் முழங்க வலம் வந்த தீர்த்தக்கலசங்கள்
கயிலாய வாத்தியங்கள் முழங்க வலம் வந்த தீர்த்தக்கலசங்கள்
ADDED : செப் 22, 2025 12:41 AM

பல்லடம்; பல்லடம் அடுத்த, பூமலுார், பல்லவராயன் பாளையம் கிராமத்தில் உள்ள பரமசிவன் கோவில் இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடந்தது.
காலை, 9:30 மணிக்கு வேள்வி வழிபாட்டுடன் விழா துவங்கியது.
பேரூர் சாந்தலிங்க அருள்நெறி மன்றத்தை சேர்ந்த ஜெயபிரகாசம் மற்றும் குழுவினர் வேள்வி வழிபாட்டை நடத்தினர். 11:00 மணிக்கு, வேள்வி வழிபாட்டில் வைத்து பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்கள், கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டன.
கோவை, மசக்காளிபாளையம் மேலை சிதம்பரத்தார் சிவகண திருக்கூட்ட அடியார் பெருமக்களின் கயிலாய வாத்திய இசை முழக்கத்துடன், தீர்த்த கலசங்கள் எடுத்துவரப்பட்டு, விநாயகர், முருகன், சிவன், அம்பிகையை தொடர்ந்து, மூலவர் பரமசிவனுக்கும் அபிஷேகம் நடந்தது.
சிறப்பு அலங்கார பூஜைகளை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.