/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்காலர்ஸ் ஆர்க் பள்ளியில் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம் ஸ்காலர்ஸ் ஆர்க் பள்ளியில் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம்
ஸ்காலர்ஸ் ஆர்க் பள்ளியில் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம்
ஸ்காலர்ஸ் ஆர்க் பள்ளியில் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம்
ஸ்காலர்ஸ் ஆர்க் பள்ளியில் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம்
ADDED : செப் 22, 2025 12:40 AM

திருப்பூர்; ஸ்காலர்ஸ் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம் குறித்த விழிப்புணர்வு வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
கேம்பிரிட்ஜ் பல்கலை சார்பில் யஸ்வந்த்குமார், திலீப் ஆகியோர் பங்கேற்று கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடத்திட்டம் மற்றும் தொடக்கநிலை, இடைநிலை மற்றும் உயர்நிலைக்கல்வி; உலகளாவிய வாய்ப்புகளுக்கு கற்றவர்கள் எவ்வாறு தயார்படுத்தப்படுகின்றனர் என்பது குறித்து விளக்கிக்கூறப்பட்டது.
கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தின்படி பயின்ற மாணவர்கள் உலகப் புகழ்பெற்ற முன்னணி பல்கலைகளில் படிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் உலகத்தரத்திலான கல்வியை எதிர்காலத்தில் இந்தியாவிலேயே பெற முடியும்.
கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம் வாயிலாக செயல்பாட்டு முறையிலான கற்றலை வழங்கும் சிறப்பு வகுப்புகள், மழலையர் பிரிவு மாணவர்களுக்கு கட்டணமின்றி, இன்று(22ம் தேதி) முதல் வரும் 30ம் தேதி வரை 9 நாட்கள் திருப்பூரில் உள்ள ஸ்காலர்ஸ் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் நடத்தப்படுகிறது.
கேம்பிரிட்ஜ் பாடத்திட்டப்படி இயங்கும் இப்பள்ளி வளாகத்தை வரும் 27ல் பெற்றோரும், மாணவரும் நேரில் பார்வையிட்டு கேம்பிரிட்ஜ் பாடத்திட்டக்குழுவினர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலாம்.
விபரங்களுக்கு: 77080 41222, 77082 71222.