/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சூரிய காந்தி விதை ஏலம்; ரூ.28.54 லட்சத்துக்கு வர்த்தகம் சூரிய காந்தி விதை ஏலம்; ரூ.28.54 லட்சத்துக்கு வர்த்தகம்
சூரிய காந்தி விதை ஏலம்; ரூ.28.54 லட்சத்துக்கு வர்த்தகம்
சூரிய காந்தி விதை ஏலம்; ரூ.28.54 லட்சத்துக்கு வர்த்தகம்
சூரிய காந்தி விதை ஏலம்; ரூ.28.54 லட்சத்துக்கு வர்த்தகம்
ADDED : செப் 12, 2025 10:57 PM
வெள்ளகோவில்; வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சூரிய காந்தி விதை ஏலம் நடைபெற்றது.
வெள்ளகோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நேற்று சூரியகாந்தி விதை ஏல விற்பனை நடந்தது. இதில் வீரணம்பட்டி, வெள்ளையம்பட்டி, உப்பிலியம்பட்டி, சாலிகரை, கரூர், மஞ்சநாயக்கன்பட்டி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் உற்பத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஏலத்தில் காங்கயம், முத்துார், வெள்ளகோவில், ஊத்துக்குளி பகுதி வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் கோரினர். இதில் மொத்தம் 46, 608 கிலோ எடையுள்ள சூரிய காந்தி விதைகள் ஏலம் விடப்பட்டன. அதிகபட்சமாக கிலோ 64.17 ரூபாய்; குறைந்த பட்சம் 54.06 ரூபாய்க்கும் ஏலம் கோரப்பட்டது. மொத்தம் 28.54 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது.