/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மழைநீர் வடிகாலில் தீர்க்கப்படாத பிரச்னை மழைநீர் வடிகாலில் தீர்க்கப்படாத பிரச்னை
மழைநீர் வடிகாலில் தீர்க்கப்படாத பிரச்னை
மழைநீர் வடிகாலில் தீர்க்கப்படாத பிரச்னை
மழைநீர் வடிகாலில் தீர்க்கப்படாத பிரச்னை
ADDED : செப் 12, 2025 10:59 PM

திருப்பூர்; திருப்பூர் ரயில்வே கேட் அருகிலுள்ள டி.பி.ஏ., காலனி பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் இருந்து வரும் சாக்கடை நீர் மழைநீர் வடிகால் கால்வாயில் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம், கொசுக்கள் உற்பத்தி, நோய் பரவும் அபாயம் என பல பிரச்னைகள் அதிகரித்துள்ளன.
அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த ஒன்பது மாதங்களாக இப்படித்தான் இருக்கிறது. இதுபற்றி மாநகராட்சி ஆபீசில் ஏற்கனவே பலமுறை புகார் அளித்துவிட்டோம். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,' என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.