/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நந்தா பொறியியல் கல்லுாரியில் 'ஸ்பிக்' நிறுவன வளாக தேர்வு நந்தா பொறியியல் கல்லுாரியில் 'ஸ்பிக்' நிறுவன வளாக தேர்வு
நந்தா பொறியியல் கல்லுாரியில் 'ஸ்பிக்' நிறுவன வளாக தேர்வு
நந்தா பொறியியல் கல்லுாரியில் 'ஸ்பிக்' நிறுவன வளாக தேர்வு
நந்தா பொறியியல் கல்லுாரியில் 'ஸ்பிக்' நிறுவன வளாக தேர்வு
ADDED : மே 31, 2025 05:26 AM

திருப்பூர்; நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின், பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத்துறை சார்பில், இயந்திரவியல் மற்றும் ரசாயனப்பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்காக, 'ஸ்பிக்' நிறுவனம், தனது வளாக தேர்வை நடத்தியது.
'ஸ்பிக்' மனிதவள பிரிவு மேலாளர் இசக்கியப்பன், துணை மேலாளர் ஜெயமோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
பொறியியல் கல்லுாரி முதல்வர் முனைவர் ரகுபதி, தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் நந்தகோபால் முன்னிலை வகித்தனர். 'ஸ்பிக்' மனிதவள பிரிவு மேலாளர் இசக்கியப்பன் சிறப்புரை ஆற்றினார். இயந்திரவியல் மற்றும் ரசாயன பொறியியல் துறைகளை சேர்ந்த, 240க்கும் அதிகமான மாணவர்கள் வளாக தேர்வில் பங்கேற்றனர். முதலில், எழுத்துத்தேர்வும், அதனை தொடர்ந்து நேர்முக தேர்வும் நடந்தது; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
கல்லுாரியின் வேலை வாய்ப்பு அலுவலக ஆசிரியர்களை, ஸ்ரீநந்தா அறக்கட்டளை தலைவர் சண்முகன், செயலர் நந்தா குமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் மற்றும் தொழில்நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் பாராட்டினர்.