ADDED : மே 31, 2025 05:26 AM

தாராபுமர்; தாராபுரம் அடுத்த மணக்கடவு ஊராட்சியில், உண்டாரப்பட்டி கிராமத்தில், பூச்சாட்டு பொங்கல் விழா நடந்தது.
அதில், சுவாமி சப்பரத்தை சுமந்து கொண்டு வந்தனர். அப்போது, பட்டாசு வெடித்ததில், மரத்தில் இருந்த ஒரு தேன் கூட்டில் விழுந்தது. இதில், தேனீக்கள், பக்தர்களை விரட்டி விரட்டி கொட்டியது.
இதில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.