/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரூ.4.53 லட்சத்துக்கு எள் ஏல வர்த்தகம் ரூ.4.53 லட்சத்துக்கு எள் ஏல வர்த்தகம்
ரூ.4.53 லட்சத்துக்கு எள் ஏல வர்த்தகம்
ரூ.4.53 லட்சத்துக்கு எள் ஏல வர்த்தகம்
ரூ.4.53 லட்சத்துக்கு எள் ஏல வர்த்தகம்
ADDED : மார் 22, 2025 11:08 PM
வெள்ளகோவில்: முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 4.53 லட்சம் ரூபாய்க்கு எள் ஏலம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் எள் ஏலம் நடப்பது வழக்கம். சுற்றுவட்டார விவசாயிகள், 19 பேர், தாங்கள் விளைவித்த, 2,751 கிலோ எள் கொண்டு வந்தனர்.
இதில், ஒரு கிலோ 182 முதல், 90.99 ரூபாய் வரையும் ஏலம் போனது. சராசரியாக, 163 ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 2,751 கிலோ எள், 4.53 லட்சம் ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடந்ததாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினர் தெரிவித்தனர்.