/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நீர் நிலைக்குள் பல வண்ணங்களில் மண் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டதா? நீர் நிலைக்குள் பல வண்ணங்களில் மண் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டதா?
நீர் நிலைக்குள் பல வண்ணங்களில் மண் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டதா?
நீர் நிலைக்குள் பல வண்ணங்களில் மண் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டதா?
நீர் நிலைக்குள் பல வண்ணங்களில் மண் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டதா?
ADDED : மார் 22, 2025 11:07 PM

பல்லடம்: நீர் நிலைக்குள் உள்ள மண் பல வண்ணங்களில் இருப்பதாக கூறிய சமூக ஆர்வலர்கள், இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.
பல்லடத்தை அடுத்த, கே.அய்யம்பாளையம், அனுப்பட்டி செல்லும் ரோட்டில், இரண்டு, நீர் ஆதார குட்டைகள் உள்ளன. இவற்றில், நுாற்றுக்கணக்கான யூனிட் மண் கடத்தப்பட்டதுடன், குட்டையில் உள்ள மண் பல வண்ணங்களில் இருப்பதாகவும், சமூக ஆர்வலர்கள் வருவாய்த்துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை மற்றும் அதன் உறுப்பினர்கள் கூறியதாவது:
கே.அய்யம்பாளையத்தில் உள்ள நீர் ஆதார குட்டைகளில், நுாற்றுக்கணக்கான யூனிட் மண் கடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இது நடந்துள்ளது என்பது, குட்டையை நேரில் ஆய்வு செய்வதில் தெரிகிறது. நீர்நிலைகளில் வண்டல் மண் அள்ளும் பணி முடிவடைந்து பல மாதங்கள் ஆகின்றன.
இச்சூழலில், திடீரென இங்குள்ள குட்டைகளில் மண் அள்ளப்பட்டது எப்படி என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், இந்த குட்டைகளில், மண்ணின் நிறம் வெவ்வேறு நிறங்களில் உள்ளன.
எனவே, குட்டையில் ரசாயனம் அல்லது ரசாயன கழிவுகள் ஏதேனும் கொட்டப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மண்ணின் நிறம் மாறியதன் காரணமாகவே, கனிமவள கடத்தலில் ஈடுபட்ட கும்பல், மேலும் மண் எடுக்காமல் விட்டுச் சென்றிருக்கலாம்.
குட்டை மண்ணின் நிறம் வெவ்வேறு நிறங்களில் இருப்பதன் காரணம் என்ன? கனிம வள கடத்தலில் ஈடுபட்டது யார்? கொள்ளையடிக்கப்பட்ட கனிம வளங்கள் எங்கு சென்றன? என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், 'தாசில்தாருக்கு இது குறித்து தெரியப்படுத்தி உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.