/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ராமகோபாலன் பிறந்த நாள்; 100 பேருக்கு மரக்கன்று ராமகோபாலன் பிறந்த நாள்; 100 பேருக்கு மரக்கன்று
ராமகோபாலன் பிறந்த நாள்; 100 பேருக்கு மரக்கன்று
ராமகோபாலன் பிறந்த நாள்; 100 பேருக்கு மரக்கன்று
ராமகோபாலன் பிறந்த நாள்; 100 பேருக்கு மரக்கன்று
ADDED : செப் 20, 2025 08:09 AM

பல்லடம்; ஹிந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலனின், 98வது பிறந்தநாள் விழா நேற்று பல்லடம் பஸ் ஸ்டாண்ட் முன் கொண்டாடப்பட்டது.
திருப்பூர் மேற்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சர்வேஸ்வரன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஞ்சித், நகரப் பொறுப்பாளர்கள் அங்குராஜ், விஜய், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, ராமகோபாலனின் உருவப்படத்துக்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் செந்தில், வெள்ளிங்கிரி மற்றும் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர். அன்னதானம் உட்பட, 100 பேருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. அருள்புரம் தண்ணீர் பந்தல் பகுதியில், ராமகோபாலன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணன், குரு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அவரின் படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்திய பின், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், மரக்கன்று மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.