ADDED : செப் 20, 2025 08:08 AM
திருப்பூர்; திருப்பூர் அருகே, 13 வயது சிறுமிக்கு தேநீரில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி. அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார். கடந்த சில நாள் முன்னர் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் சிறுமி வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். அங்கு வந்த கூலி தொழிலாளி பாலமுருகன், 34, சிறுமிக்கு தேநீர் கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்தது.
அதனை அருந்தி மயங்கிய சிறுமியை பாலமுருகன், பலாத்காரம் செய்தார். சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கோவை அரசு மருத்துவமனையில் பெற்றோர் சிகிச்சைக்கு சேர்த்த போது, இந்த விவரம் தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து மங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.