/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக ஆடை விற்பனை கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக ஆடை விற்பனை
கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக ஆடை விற்பனை
கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக ஆடை விற்பனை
கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக ஆடை விற்பனை
ADDED : ஜூன் 01, 2025 07:15 AM

திருப்பூர் : திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில், கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா நடந்து வருகிறது. நேற்று துவங்கிய கண்காட்சி, இன்று நிறைவு பெறுகிறது.
இதில், கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக ஆடைகள் விற்பனை செய்யும், 'ஓபன் எண்ட் பேஷன்ஸ்' என்ற நிறுவனமும், ஸ்டால் உரிமையாளர் ராஜேஸ்வரி கூறியதாவது:
பாலுாட்டும் தாய்மார்கள் சந்திக்கும் சங்கடங்கள் எனக்கு தெரியும், அதனை உணர்ந்து, புதிய வகையிலான ஆடைகளை உற்பத்தி செய்து, விற்கிறேன். கடந்த ஐந்து மாதங்களாக, தரமான பருத்தி துணி உற்பத்தி செய்தும், உயர்தர 'பேப்ரிக்'களை வாங்கியும், கர்ப்பிணிகளுக்கான ஆடைகள் வடிவமைத்து கொடுக்கிறோம்.
ஏற்றுமதி தரம் வாய்ந்த, உயர்தர பருத்தி நுாலிழையில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், கர்ப்பிணிகளுக்கு மிகவும் ஏற்றது. கர்ப்ப காலம் முழுவதும் மற்றும் குழந்தைகளுக்கு பாலுாட்ட வசதியான ஆடைகள் என, இருவேறு வகையான ஆடைகள் உற்பத்தி செய்கிறோம்.
'ஜிப்' இல்லாமல், எளிதாக அணியும் வகையில் ஆடை வழங்கி வருகிறோம். முழுவதும், பருத்தி நுாலிழை ஆடைகள் மட்டும் விற்பனை செய்கிறோம். நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் ஆடைகளை விற்கிறோம். காங்கயம் ரோட்டில், எங்களது உற்பத்தி பிரிவு இயங்கி வருகிறது. மேலும் விவரங்களுக்கு, 96005 65160 என்ற எண்களில் அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.