/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது
ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது
ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது
ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது
ADDED : ஜூன் 01, 2025 07:15 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதியில் உள்ள, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
இன்ஜினியரிங் - எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்டர், டர்னர், ஒயர்மேன், வெல்டர் டூல் மற்றும் டை மேக்கர், மெக்கானிக் மோட்டார் வாகனம் ஆகிய பிரிவுகள், இன்ஜினியரிங் அல்லாத, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், கட்டட பட வரைவாளர் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் துவங்கிய 'இன்டஸ்ட்ரீஸ் -4.0' தொழிற்பிரிவுகளில், 2025ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக துவங்கியுள்ளது.
தரமான பயிற்சி அளிப்பதுடன், மாதாந்திர உதவியாக, 750 ரூபாய் வழங்கப்படும். சைக்கிள், சீருடை, பாட புத்தகம், காலணி மற்றும் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற ஆண்களுக்கு, தமிழ் புதல்வன் திட்டத்திலும், பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்திலும், மாதம், 1000 ரூபாய் வழங்கப்படும்.
எட்டாம் வகுப்புடன், இரண்டாண்டு, ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை வாயிலாக, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு, www.skilltraining.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். திருப்பூர் ஐ.டி.ஐ., - 94990 55696, தாராபுரம் - 94990 55698, உடுமலை - 94990 55700 ஆகிய உதவி மையங்களையும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை, 94990 55695 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.