/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பதிவு இணையதளத்தில் துவங்கவில்லை கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பதிவு இணையதளத்தில் துவங்கவில்லை
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பதிவு இணையதளத்தில் துவங்கவில்லை
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பதிவு இணையதளத்தில் துவங்கவில்லை
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பதிவு இணையதளத்தில் துவங்கவில்லை
ADDED : ஜூன் 01, 2025 07:15 AM
திருப்பூர் : பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பயில, வழிவகுக்கும் வகையில், 2009ல் கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.
இச்சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்தில், மாணவ, மாணவியரின் கல்வி கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் தனியார் பள்ளிக்கு செலுத்தும். எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இலவசமாக கல்வி பயில வழிவகுக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் இணைய ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.
நேரடியாக இல்லாமல் ஆன்லைனில் மட்டுமே பெற்றோர் விண்ணப்பிக்க முடியும். https://tnschools.gov.in/ என்கிற பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் விபரங்கள் வெளியாகும். இது குறித்து அனைத்து மாவட்ட கல்வித்துறைகளும் செய்திகளை வெளியிடும். ஆனால், நடப்பாண்டு, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவ, மாணவியர் இணைவதற்கான எந்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அறிவிப்பு இல்லாத நிலையில், இணையதளத்திலும் இது தொடர்பான விரிவான விளக்கங்களும் இடம் பெறவில்லை.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'நடப்பாண்டு, மத்திய அரசின் நிதி இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளது. எனவே, மாநில அரசு, மாவட்ட கல்வித்துறைக்கு எந்த அறிவுறுத்தல்களும் வழங்கவில்லை. ஏதேனும் அறிவுறுத்தல் வந்தால் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்கப்படும்,' என்றனர்.