Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை

கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை

கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை

கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை

ADDED : ஜன 17, 2024 12:20 AM


Google News
உடுமலை;உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இதன் வழியாக கோவை -மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், பாலக்காடு - சென்னை, திருவனந்தபுரம் - மதுரை ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் ரயில்களில் பயணம் செய்ய வருகின்றனர். ஆனால், இங்கு கண்காணிப்பு கேமரா இல்லை. பயணியரின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்பாடுகளை கண்காணிக்கவும், கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், பயணியர் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us