படையெடுப்புகளால் அழிந்த மத தலங்களை மீட்க வேண்டும்: உ.பி., முதல்வர் யோகி பேச்சு
படையெடுப்புகளால் அழிந்த மத தலங்களை மீட்க வேண்டும்: உ.பி., முதல்வர் யோகி பேச்சு
படையெடுப்புகளால் அழிந்த மத தலங்களை மீட்க வேண்டும்: உ.பி., முதல்வர் யோகி பேச்சு
ADDED : செப் 14, 2025 12:28 AM

அயோத்தி: “வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட கோவில்கள் உள்ளிட்ட மத தலங்கள், உரிய மரியாதையுடன் மீட்டெடுக்கப்பட வேண்டும்,” என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
உத்தர பிரதேத்தின் அயோத்தியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ.,வைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
அடிமைத்தன காலத்தில், வெளிநா ட்டு படையெடுப்பாளர்களால் ஏராளமான மதத் தலங்கள் அழிக்கப்பட்டன. அவற்றை மீட்டெடுப்பது நம் கடமை. அயோத்தி, காசி, மதுராவில் உள்ள ஹிந்து கோவில்கள் உட்பட அனைத்து மத தலங்களும் முழு மரியாதையுடன் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
இந்த மறுசீரமைப்பு என்பது நம்பிக்கையின் செயல் மட்டுமல்ல. இது, கலாசார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்திற்கான பொறுப்பும் கூட. அயோத்தியில் தற்போது எழுந்துள்ள ராமர் கோவில் உருவாக, 500 ஆண்டுகளாக துறவியர், பக்தர்கள் என ஏராளமானோர் போராடினர். இன்று அந்த கனவு நனவாகியுள்ளது. இதுபோல், பிற தலங்களும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
நம் மூவர்ணக் கொடி, அரசியலமைப்பு போல், மத சின்னங்களுக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும். சனாதன தர்மம் நன்றி உணர்வை போதிக்கிறது. சமூகம் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்தையும் நாடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.