ADDED : மே 21, 2025 11:19 PM
உடுமலை,; உடுமலை கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தும் தார்ச்சாலை உள்ளது.
விவசாய விளை பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்லவும், விவசாயப் பயன்பாட்டிற்காக, கனரக வாகனங்கள் விவசாய நிலங்களுக்கு வந்து பணிகள் செய்திடவும், இந்த ரோடு பிரதான வழித்தடமாக உள்ளது. இதே ரோட்டில், ரேஷன் கடையும் அமைந்துள்ளது.
இந்த ரோட்டில், போக்குவரத்து பாதிக்கும் வகையில், ஆக்கிரமிப்புகள் அதிகளவு காணப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் ஜமாபந்தியில் மனு அளித்தனர்.