Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அங்கன்வாடிகளில் கே.ஜி.,வகுப்பு: ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்

அங்கன்வாடிகளில் கே.ஜி.,வகுப்பு: ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்

அங்கன்வாடிகளில் கே.ஜி.,வகுப்பு: ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்

அங்கன்வாடிகளில் கே.ஜி.,வகுப்பு: ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்

ADDED : மே 21, 2025 11:21 PM


Google News
உடுமலை; அங்கன்வாடி மையங்களில், கே.ஜி., வகுப்புகளுக்கு தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, அங்கன்வாடி மையங்களில் கே.ஜி., வகுப்பு துவங்கும் திட்டம் கல்வியாண்டு, 2018-19ல் செயல்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், வளாகத்துக்குள் செயல்படும் அங்கன்வாடி மையங்களைக்கொண்ட, 30 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது. இப்பள்ளிகளில் உள்ள மையங்களில், 'கிண்டர் கார்டன்', எனப்படும் கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட்டன.

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள், கே.ஜி., வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். கே.ஜி., வகுப்புகளுக்கு தற்காலிகமாக மட்டுமே, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உடுமலை சுற்றுப்பகுதியில் பெரும்பான்மையான மையங்களில் ஆசிரியர்கள் தற்போது இல்லை.

மாற்றாக அங்கன்வாடி பணியாளர்கள் தான், கே.ஜி., வகுப்புகளையும் நடத்தும் சூழல் உள்ளது. இன்னும் சில பள்ளிகளில் கே.ஜி., வகுப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன.

அங்கன்வாடி மையங்களில், ஆசிரியர்கள் நியமித்து மீண்டும் கே.ஜி.,வகுப்புகளை துவக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us