/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விஷவாயு விபத்து : மேலும் ஒருவர் பலி விஷவாயு விபத்து : மேலும் ஒருவர் பலி
விஷவாயு விபத்து : மேலும் ஒருவர் பலி
விஷவாயு விபத்து : மேலும் ஒருவர் பலி
விஷவாயு விபத்து : மேலும் ஒருவர் பலி
ADDED : மே 21, 2025 06:54 AM
திருப்பூர் : திருப்பூர் அருகே சாய ஆலையில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் இறந்த நிலையில், சிகிச்சையில் இருந்த மேலும், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் - கரைப்புதுாரில் சாய ஆலை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சாய ஆலையில் தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதியில் உள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணிக்கு, ஐந்து பேர் சென்றனர்.
ஏழு அடி ஆழமுள்ள தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது, விஷவாயு தாக்கி ஐந்து பேரும் மயக்கமடைந்தனர்.
மயக்கமடைந்தவர்கள், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதில், திருப்பூர் சுண்டமேட்டை சேர்ந்த சரவணன், 30, வேணுகோபால், 31 என, இருவர் இறந்தனர்.
மற்ற, மூன்று பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஹரிகிருஷ்ணன், 26 என்பவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக, கலெக்டர் மற்றும் எஸ்.பி., விசாரணை நடத்தினர். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும், மனித கழிவை அள்ளும் பணியில் ஈடுபட்டது தெரிந்தது.
விஷவாயு தாக்கியது தொடர்பாக, சாய ஆலை நிறுவன பொது மேலாளர் தனபால், 52, சூப்பர்வைசர் அரவிந்த், 44, நிறுவன உரிமையாளர் நவீன், 40 மற்றும் செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய தொழிலாளர்களை அழைத்து வந்த லாரி டிரைவர் சின்னசாமி, 30 என, நான்கு பேர் மீது மனித கழிவை மனிதர்களே அகற்றுவதை தடை செய்யும் சட்டம் உட்பட, நான்கு பிரிவின் கீழ் பல்லடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.