ADDED : ஜூன் 15, 2025 11:39 PM

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் கூட்டம் மற்றும் இளைஞர் காங்., தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, பார்க் ரோடு, ஐ.என்.டி.யு.சி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன் தலைமை வகித்தார். திருப்பூரில் புதிதாக அரசு கல்லுாரிகள் துவங்குதல், கூடுதலாக இடங்களை ஏற்படுத்தித்தருதல், மாநகர சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேசிய செயலாளர் கூறுகையில், ''விமான விபத்துக்கு பொறுப்பேற்று, விமான போக்குவரத்து துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய கல்வி நிதி நிறுத்தப்பட்டுள்ளது; மத்திய அரசு விடுவிக்க வேண்டும்'' என்றார்.