ADDED : ஜூன் 15, 2025 11:40 PM

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மா.கம்யூ., சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடந்தது. பாண்டியன் நகர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், முத்துக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பேசினர். மத்திய அரசு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
வேலை உறுதி திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த வேண்டும். அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். தமிழக அரசு, ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும். மின்சார கட்டணம், வீட்டுவரி உயர்வு உள்ளிட்ட வரி உயர்வை கைவிட வேண்டும். 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.