தேங்காய் விலை உயர்வு நிரந்தரமானதா?
தேங்காய் விலை உயர்வு நிரந்தரமானதா?
தேங்காய் விலை உயர்வு நிரந்தரமானதா?
ADDED : ஜூன் 15, 2025 11:40 PM
'தினம், தினம் புதிய உச்சம் தொடும் தேங்காய் கொப்பரை விலை, நீடித்த நிலையானதாக இருக்குமா,' என்ற கேள்வி, விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், பல்லடம், அவிநாசி மற்றும் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் பெருமளவில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் வாயிலாக, தேங்காய் கொப்பரை விற்பனை செய்யப்படும் நிலையில், இதுவரையில்லாத வகையில் விலை அதிகரித்துள்ளது.
தினம் தினம் புதிய உச்சம் காணும் தேங்காய் கொப்பரை விலையில், முதல் தர கொப்பரை, கிலோவுக்கு, 220 ரூபாயை தாண்டியிருக்கிறது. இந்த விலையேற்றம் நீடிக்குமா அல்லது குறையுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்திருக்கிறது.