/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூலி உயர்வு அளிக்க மறுப்பு: விசைத்தறியாளர் ஆதங்கம் கூலி உயர்வு அளிக்க மறுப்பு: விசைத்தறியாளர் ஆதங்கம்
கூலி உயர்வு அளிக்க மறுப்பு: விசைத்தறியாளர் ஆதங்கம்
கூலி உயர்வு அளிக்க மறுப்பு: விசைத்தறியாளர் ஆதங்கம்
கூலி உயர்வு அளிக்க மறுப்பு: விசைத்தறியாளர் ஆதங்கம்
ADDED : ஜூன் 01, 2025 07:09 AM

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி நெசவாளர்கள் நல சங்க அவசரப் பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
தெக்கலுார் சங்க தலைவர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கலெக்டர்கள், அமைச்சர்கள், மேயர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 2022ம் ஆண்டு ஒப்பந்த கூலியிலிருந்து சோமனுார் ரகத்துக்கு, 15 சதவீதம்; இதர ரகங்களுக்கு 10 சதவீதம் உயர்வு தருவதாக முடிவு செய்யப்பட்டது.
கூலி உயர்வை இதுவரை ஜவுளி உற்பத்தியாளர்கள் முழுமையாக அமல்படுத்தாததால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனைத்து விசைத்தறி உரிமையாளர்களும் கட்டாயம் கூலி பில் வாங்க வேண்டும். அரசு அறிவித்த கூலி உயர்வை கண்டிப்பாக குறைக்காமல் வாங்குவது, கூலி கொடுக்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களிடமிருந்து விசைத்தறி உரிமையாளர்கள் வரவு செலவு கணக்கு முடித்துக் கொள்வது மற்றும் அரசு அறிவித்த கூலி உயர்வை, 5 வாரங்கள் கடந்தும் அமல்படுத்தாத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து வரும், 9ம் தேதி முதல் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்க காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.