/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நீர் வரத்து இல்லாத இடத்தில் வெட்டப்பட்ட குளம் நீர் வரத்து இல்லாத இடத்தில் வெட்டப்பட்ட குளம்
நீர் வரத்து இல்லாத இடத்தில் வெட்டப்பட்ட குளம்
நீர் வரத்து இல்லாத இடத்தில் வெட்டப்பட்ட குளம்
நீர் வரத்து இல்லாத இடத்தில் வெட்டப்பட்ட குளம்
ADDED : ஜூன் 01, 2025 07:09 AM

பொங்கலுார் : பொங்கலுார் ஒன்றியம், அலகுமலை அருகே நீர்நிலை புறம்போக்கு உள் ளது. ஆனால் அது மேடான பகுதியில் உள்ளது.
கடந்த ஆண்டு நீர்நிலை புறம்போக்கு இடத்தில் புதிதாக குளம் வெட்டப்பட்டது. ஆனால், குளத்திற்கு தண்ணீர் வரும் வழியோ அல்லது தண்ணீர் வெளியேறுவதற்கான வழியோ இல்லை.
பி.ஏ.பி., தண்ணீரை குளத்தில் நிரப்புவதாக கூறப்பட்டது. பாசன பகுதிகளுக்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், குளத்திற்கு தண்ணீர் விடுவதற்கான சாத்தியக்கூறு இல்லை. தண்ணீர் வராத இடத்தில் குளத்தை வெட்டிவிட்டு சும்மா வைத்திருப்பதற்கு பதிலாக அங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்தால் உபயோகமாக இருக்கும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.