/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்று வழியால் அவதி விழி பிதுங்கும் பொதுமக்கள் மாற்று வழியால் அவதி விழி பிதுங்கும் பொதுமக்கள்
மாற்று வழியால் அவதி விழி பிதுங்கும் பொதுமக்கள்
மாற்று வழியால் அவதி விழி பிதுங்கும் பொதுமக்கள்
மாற்று வழியால் அவதி விழி பிதுங்கும் பொதுமக்கள்
ADDED : ஜூன் 07, 2025 11:29 PM

திருப்பூர்: மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள தற்காலிக மாற்று வழி கூட, குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். 'பேட்ஜ் ஒர்க்' மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் நொய்யலாற்றில் உள்ள, ஈஸ்வரன் கோவில் வீதி, யூனியன் மில் ரோட்டை இணைக்க பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. உயர்மட்ட பாலம் பணியால், ஏற்கனவே இருந்த ஈஸ்வரன் கோவில் பழைய பாலம் இடிக்கப்பட்டு விட்டது.
புதிய பாலம் பணி இழுபறியாக இருப்பதால், வாகனங்கள் ஈஸ்வரன் கோவில் வீதியில் இருந்து செல்லாண்டியம்மன் கோவில் முன்புறம் சென்று, வளம் பாலம் வழியாக, ஸ்ரீ சக்தி தியேட்டர் ரவுண்டானா வந்து, யூனியன் மில்ரோடு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேறு மாற்று வழி இல்லாததால், அனைத்து வாகனங்களும் இந்த வழியாக செல்கின்றன; காலை, மாலை, 'பீக்ஹவர்ஸ்' நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது.
தற்காலிக மாற்று சாலையின் பல இடங்களில், சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இரவில் விளக்குகள் எரியாததால், சறுக்கி விழுகின்றனர். வாகன ஓட்டிகள் நலம் கருதி, தற்காலிக சாலையில் மாநகராட்சி 'பேட்ஜ் ஒர்க்' மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.